மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தகவல்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றிருந்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், 4 பேருக்கு…

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றிருந்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கடந்த 22ஆம் தேதி பரிசோதனை மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்துக்கு, கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்தது. கடந்த 2 நாட்களாக தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்ட ரஜினிகாந்துக்கு, திடீரென ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டதால், அவர் உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே, ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து, அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ரத்த அழுத்த மாறுபாட்டிற்கு, சிகிச்சை அளித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 24 மணி நேர கண்காணிப்பிற்கு பிறகு, இன்று நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத் மருத்துவமனையிலிருந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து, தொலைபேசி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இதனிடையே, பாபாஜியின் ஆசிர்வாதங்களுடன் நடிகர் ரஜினிகாந்த் முழுமையான உடல் நலம் பெற்று, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப வேண்டும், என பிரபல தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள், என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விடட்ர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply