மம்தா பானர்ஜியின் சித்தாந்தம் மேற்கு வங்கத்தை அழித்து விட்டதாக பிரதமர் நரேந்திரமோடி குற்றம் சாட்டி உள்ளார்.
நாடு முழுதும் உள்ள 9 லட்சம் விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்துப் பேசிய அவர், மேற்கு வங்க மாநிலத்தைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பிரதமரின் கிஷான் திட்டம் அமல்படுத்தப்படுவதாக கூறி உள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பலன் பெற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 23 லட்சம் விவசாயிகள் அன்லைன் வாயிலாக விண்ணப்பித்திருப்பதாக கூறியுள்ள பிரதமர், ஆனால் மாநில அரசு அதனை சரிபார்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று கூறி உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 70 லட்சம் விவசாயிகள் பலன் பெறுவதை அரசியல் கொள்கை காரணமாக மம்தா தடுப்பதாக அவர் குறை கூறி உள்ளார். பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் தலா 6 ஆயிரம் ரூபாய் உதவி பெறுவதில் ம ம்தா அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார். ம ம்தா பானர்ஜியின் 15 ஆண்டுகால பழைய பேச்சுகளை பொதுமக்கள் கேட்டிருந்தால், அவரது சித்தாத்தங்கள் மேற்கு வங்கத்தை எந்த அளவுக்கு பாழாக்கிவிட்டது என்பது தெரியும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.







