மநீம-க்கு கூடும் கூட்டத்தை பார்த்து அதிமுக அமைச்சர்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர்: கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கூடும் கூட்டத்தை பார்த்து அதிமுக அமைச்சர்கள் தூக்கமின்றி தவிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, சட்டமன்றத் தேர்தலில்…

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கூடும் கூட்டத்தை பார்த்து அதிமுக அமைச்சர்கள் தூக்கமின்றி தவிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்றும் எந்த தொகுதியில் போட்டி என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நேரம் வரும் போது முடிவு செய்வேன் என்று தெரிவித்த கமல், மக்கள் நீதி மய்யம் எளியவர்களுக்கான கட்சி இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க சிலர் முயற்சிப்பதாகக் கூறினார். மூன்றாவது அணி அமைப்பது குறித்து விரைவில் அறிப்போம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

இதற்கிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கூடும் கூட்டத்தை பார்த்து அதிமுக அமைச்சர்கள் தூக்கமின்றி தவிப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply