மசாலா பொருட்கள் வியாபாரி வீட்டில் மிளகாய் பொடி தூவி பணம் கொள்ளை!

மசாலா பொருட்கள் வியாபாரி வீட்டில் மிளகாய் பொடி தூவி, பணம் மற்றும் விலைமதிப்புமிக்க பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில், மசாலா பொருட்கள் வியாபாரி வீட்டில் மிளகாய் பொடி தூவி, 2 லட்சம் ரூபாய் பணம், 3…

மசாலா பொருட்கள் வியாபாரி வீட்டில் மிளகாய் பொடி தூவி, பணம் மற்றும் விலைமதிப்புமிக்க பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரத்தில், மசாலா பொருட்கள் வியாபாரி வீட்டில் மிளகாய் பொடி தூவி, 2 லட்சம் ரூபாய் பணம், 3 கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். மசாலா பொருட்கள் விற்பனை செய்து வரும் ரங்கராஜன், உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுவிட்டு, காலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியைந்தார்.

உடனடியாக அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து, அதிலிருந்த 2 லட்சம் ரூபாய், 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்துள்ள பஜார் காவால்நிலைய போலீசார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply