ஐ.பி.எல் தொடரில், பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 52-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி யின் கேப்டன் விராத் கோலி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஐதராபாத் அணியின் ஜேசன் ராய், அபிஷேக் ஷர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அபிஷேக் ஷர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ஜேசன் ராயுடன் இணைந்தார். நிதானமாக ஆடிய இவர்கள், 12-வது ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. வில்லியம்சன 31 ரன்களிலும் அடுத்த வந்த பிரியம் கார்க் 15 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அரை சதத்தை நோக்கி முன்னேறிய ஜேசன் ராய் 44 ரன்களில் கிறிஸ்டியன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு அணியில் ஹர்ஷத் பட்டேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கிறிஸ் டியன் 2 விக்கெட்டுகளும், சாஹல் மற்றும் கார்டன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களுக்கு அணியில் விராத் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். விராத் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிறிஸ்டியன் 1 ரன்னில் வெளியேறினார். பின்னர் வந்த ஸ்ரீகர் பாரத் 12 ரன்களிலும் ஆட்டமிழக்க, தேவ்தத் படிக்க லுடன் இணைந்தார் மேக்ஸ்வெல் .
படிக்கல் நிதானமாக, மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி, 25 பந்துகளில் 40 ரன்களில் விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சபாஸ் அகமது 14 ரன்களில் கேட்ச் ஆக, அந்த அணியால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது.
கார்டன் 2 ரன்களும், டி வில்லியர்ஸ் 19 ரன்களும் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தனர். ஐதராபாத் அணியின் சார்பில் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல் மற்றும் மாலில் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.