பெண்கள், குழந்தைகளை அதிகம் தாக்கும் ரத்தசோகை; ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் ரத்த சோகையால் பாதிக்கப்படுவதாக National Family Health Survey தெரிவித்துள்ளது. அனீமியா எனப்படும் ரத்த சோகை பாதிப்பால் இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள்…

கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் ரத்த சோகையால் பாதிக்கப்படுவதாக National Family Health Survey தெரிவித்துள்ளது.

அனீமியா எனப்படும் ரத்த சோகை பாதிப்பால் இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த பாதிப்பால் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் பல்வேறு உடல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2019ம் ஆண்டு 68.4 சதவீதம் குழந்தைகள் மற்றும் 66.4 சதவீதம் பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அதேநேரத்தில் கடந்த 2016ம் ஆண்டு 35.7% குழந்தைகள் மற்றும் 46.1% பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அசாம் மாநிலத்தில்தான் ஏராளமானோர் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை 18 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் நாகாலாந்தில் 19.3 சதவீதமாக இருந்த ரத்த சோகை பாதிப்பு 2019ம் ஆண்டு 46.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் மேகாலயா, ஆந்திரபிரதேசம், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ரத்த சோகையால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. ஹரியானா, ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மத்தியில் இந்த பாதிப்பு அதிகம் இருக்கிறது. 2016ம் ஆண்டு எடுக்கப்பட்ட Global nutrition சர்வேயின்படி, உலகளவில் பெண்கள் ரத்த சோகையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா 170வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply