அதிமுகவின் இரட்டைஇலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட முத்துப்பட்டி கிராமத்தில் கண்மாயை தூர் வாரும் பணியைத் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவினர் நடத்தி வரும் கிராம சபை கூட்டத்தைக் கண்டு அதிமுக பயப்படவில்லை என்றார். கிராம சபை கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆட்களை திமுகவினர் அழைத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இழந்த சின்னத்தை மீண்டும் பெற்ற ஒரே கட்சி அதிமுக என்றும், இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.







