புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டர் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா அருகே உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினரும், உள்ளூர் போலீசாரும் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியுருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினர்.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், ஜெய்ஷ்-இ- முகமது இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் தொடர்ந்து அந்த பகுதியில் தேடுடுதலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புல்வாமா பகுதியில் நடந்த 2வது என்கவுண்டர் இதுவாகும்.







