துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு.
புதுச்சேரியில் கொரோனா மேலாண்மையை வலுப்படுத்துவது தொடர்பான உயர்நிலைக் கூட்டம் துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி
புதுச்சேரி முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் கடைகள், அங்காடிகள் பகல் 2 மணி மட்டுமே இயங்கும், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வயது 18 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில் தேவையான அளவு தடுப்பூசிகளை கொள்முதல் செய்யப்படும், ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது பரிசோதனை முடிவுகளை விரைவுபடுத்துவது அதற்குத் தேவையான மருத்துவக் கருவிகளை கூடுதலாக கொள்முதல் செய்வது, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்களின் ஒத்துழைப்போடு செயல்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவப் பணிகளுக்காக தேவையான அளவு ஆட்களை நியமனம் செய்தல், மருத்துவப் பணியாளர்களை சுழற்சி முறையில் பணியமர்த்துவது மருத்துவப் பணியாளர்கள், பிற அதிகாரிகளுக்கு எளிதான பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்களை வழங்குவது, மத்திய அரசின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது, கபசுர குடிநீர் வழங்குவது உள்ளிட்ட இந்திய மருத்துவ வழிமுறைகளை ஊக்கப்படுத்துவது ஆம்புலன்ஸ் ஊர்திகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, கொரோனா அழைத்துச் செல்ல தனியான ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பயன்படுத்துவது, அறிகுறிகள் காணப்படும் நபர்களை மருத்துவப் பணியாளர்களின் பரிசோதனையைத் தொடர்ந்து மருத்துவமனை அல்லது கொரோனா பாதுகாப்பு மையங்களில் சேர்க்க வேண்டும் போன்ற முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் மூலம் தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும், உணவு மற்றும் பிற தேவைகள் மருத்துவமனைகளில் வழங்கப்பட வேண்டும், புதுச்சேரி முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்துவது மற்ற நாட்களில் கடைகள் அங்காடிகள் பகல் 2 மணி மட்டுமே இயங்கும் அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும், பகல் 2 மணிக்குப் பிறகு, உணவு விடுதிகளில் உணவு எடுத்துச் செல்ல மட்டும் அனுமதிக்கப்படும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர், வழிபாட்டுத் தலங்களில் ஊர்வலங்கள் தேரோட்டங்கள் முதலியவை தடை செய்யப்படுகிறது, கொரோனா வழிமுறைகளோடு வழிபாடு அனுமதிக்கப்படும், என இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை பொதுமக்கள் அத்தியாவசியம் இன்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் ஆராய்ச்சி பட்ட மேற்படிப்பு மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளில் இருந்து வரும் 25-ஆம் தேதிக்குள் வெளியேறி தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.







