பாபி சிம்ஹாவின் “நான் வயலன்ஸ்” – மீண்டும் கைகோர்க்கும் “மெட்ரோ” படக்குழு!

மெட்ரோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அப்படக்குழு மீண்டும் இணைந்துள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்திற்கு நான் வயலன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர்…

மெட்ரோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அப்படக்குழு மீண்டும் இணைந்துள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்திற்கு நான் வயலன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் தற்போது இயக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. அந்த வகையில், ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று (மே 24) வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஏ.கே. பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் இந்த ஆண்டில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படக்குழு இப்படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, படத்திற்கு “நான் வயலன்ஸ்” என தலைப்பிடப்பட்டுள்ளது. மெட்ரோவின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தற்போது மீண்டும் இந்த அணி கைகோர்த்துள்ளது. ஷிரிஷின் முதல் படமான மெட்ரோவிற்காக ஃபிலிம்ஃபேர் மற்றும் பல விருதுகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.