ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 5 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 32 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார்.
பரமக்குடி அருகே உள்ள நயினார் கோவில் பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் வேலுச்சாமிக்கு (32) இதுவரை திருமணம் நடக்கவில்லை. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு வீட்டில் 5 வயது சிறுமியுடன் ஒரு குடும்பம் வசித்து வருகிறது. இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் வீட்டில் சிறுமியை தனியாக விட்டுவிட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.
சிறுமி தனியாக இருப்பதை அறிந்த வேலுச்சாமி, அங்கு சென்று சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி, பெற்றோர் வந்தவுடன் அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பரமக்குடி அனைத்து மகளிர்
போலீசார் வேலுச்சாமியை பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பெண் குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தை பயன்படுத்தி இதுபோன்ற சமூக விரோதிகள் பாலியல் தொந்தரவு போன்ற குற்ற செயல்களில் அதிகம் ஈடுபடுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.







