புதுச்சேரியில் வெளுத்து வாங்கிய கனமழை… குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி!

புதுச்சேரியில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்…

புதுச்சேரியில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி புதுச்சேரி முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் நகரின் உள்ள தாழ்வான பகுதிகளான ரெயின்போ நகர், பூமியின் பேட்டை, வெங்கட்டா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் மிகவும் பாதிப்பட்டுள்ளர். இதே போல் புதுச்சேரியின் முக்கிய சாலைகளிலும் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் ரெயின்போ நகர் குடியிருப்பு பகுதியில் எம்எல்ஏ ஜான்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக அதிகப்படியான வீடுகள் நீரில் மூழ்கி உள்ளதாகவும், அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எம்எல்ஏ ஜான்குமார் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply