நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுக இன மக்கள் ஹெத்தையம்மனை குல தெய்வமாக வழிபட்டு வருகின்றன்ர். இதனையொட்டி, ஆண்டுதோறும் கோத்தகிரி அருகே பேரகணியில் உள்ள ஹெத்தை அம்மன் கோயிலில் திருவிழா விமர்சியாக நடத்தபட்டு வருவது வழக்கம். இத்திருவிழாவின்போது மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் அங்கு சென்று ஹெத்தை அம்மனை வழிபடுவர்.
அதன்டிப, இந்த ஆண்டிற்கான திருவிழா பல்வேறு கிராமங்களில் நேற்று தொடங்கிய நிலையில் பேரகணி ஹெத்தை அம்மன் கோயிலில் நாளை திருவிழா நடைபெற உள்ளது. ஹெத்தை அம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 24-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். இந்த திருவிழா வரும் 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.







