போலீசாரால் மீட்கப்பட்ட கேரள ரியல் எஸ்டேட் அதிபரின் காரில் 90 லட்ச ரூபாய் ஹாவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான அப்துல் சலாம் என்பவர், தனது ஓட்டுநர் சம்சுதீன் உடன் பெங்களூருவில் இருந்து கோவை வழியாக கேரளா சென்ற போது அவரது காரை மர்ம கும்பல் கடத்தி சென்றது. 27 லட்சம் ரூபாய் பணத்துடன் கார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடத்தப்பட்ட காரை கோவை சிறுவாணி பகுதியில் போலீசார் மீட்டனர். பின்பு காரை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று முழுமையாக சோதனை செய்தபோது, காரின் பின் பகுதியில் நான்கு ரகசிய அறைகள் இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த ரகசிய அறைகளில் இருந்த 90 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அப்துல் சலாமிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







