தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனி பகவான்!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் ஆலய சனீஸ்வர பகவான் கோயிலில் சனி பெயர்ச்சி விழா நடைபெற்றது. இன்று காலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனி பகவான் இடம்…

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் ஆலய சனீஸ்வர பகவான் கோயிலில் சனி பெயர்ச்சி விழா நடைபெற்றது. இன்று காலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனி பகவான் இடம் பெயர்ந்தார். தொடர்ந்து சனிபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சனிப்பெயர்ச்சி விழாவில், கலந்து கொள்ள குறைவான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். நிகழ்ச்சியை முன்னிட்டு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, பல தடைகளையும் தாண்டி, இறைவன் அருளால் சனிப்பெயர்ச்சி விழா நல்லபடியாக நடைபெற்றதாக கூறினார். மேலும் திருநள்ளாறு சனிபெயர்ச்சியை தடுக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எடுத்த அனைத்து முயற்சிகளும் இறைவன் அருளால் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply