திருப்பதி கோயிலில் வீடியோ எடுத்த நபர் : பாதுகாப்பு அலட்சியம் என பக்தர்கள் குற்றச்சாட்டு

ஆந்திரா மாநிலம்  திருப்பதி ஏழுமலையான்  கோயிலுக்குள் செல்போனை வைத்து   ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். கோவில் பாதுகாப்பில் ஊழியர்கள் அலட்சியமாக இருப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருப்பதி  கோயிலுக்குள் பாதுகாப்பு காரணங்களுக்காக செல்போன்களை எடுத்து செல்ல …

ஆந்திரா மாநிலம்  திருப்பதி ஏழுமலையான்  கோயிலுக்குள் செல்போனை வைத்து   ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். கோவில் பாதுகாப்பில் ஊழியர்கள் அலட்சியமாக இருப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பதி  கோயிலுக்குள் பாதுகாப்பு காரணங்களுக்காக செல்போன்களை
எடுத்து செல்ல  தடை விதிக்கப்பட்டுள்ளது.  வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் துவங்கி  இரண்டு  பரிசோதனைக்கு பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

திருப்பதி கோயிலில் செல்போன், கேமரா மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க கோயில் நிர்வாகத்தின் சார்பில்  இந்த தடை  விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பக்தர் ஒருவர் ஏழுமலையான் கோவிலுக்குள் தன்னுடைய செல்போனில் வீடியோ ஒன்று எடுத்துள்ளார்.

இச்சம்பவம் திருப்பதி கோயிலில்  உள்ள பாதுகாப்பு ஊழியர்களின்  அலட்சியத்திற்கு உதாரணமாக  அமைந்துள்ளது என பக்தர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.