திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: தரிசனத்திற்காக 30 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!

கோடை விடுமுறையின் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது. ஐந்து கிலோமீட்டர் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியாவில் அதிகளவு பக்தர்கள் செல்லும் கோயிலாக…

கோடை விடுமுறையின் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது. ஐந்து கிலோமீட்டர் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்தியாவில் அதிகளவு பக்தர்கள் செல்லும் கோயிலாக திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளது. ஆந்திரா மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக்கோயில் தான் அதிகளவு வருவாய் பெறும் கோயிலாகவும் உள்ளது.

இந்நிலையில் 300 ரூபாய் கட்டண சிறப்பு தரிசனத்திற்கு ஏற்கனவே பதிவு செய்துள்ள பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்த சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். டோக்கன் பெறாத பக்தர்கள் நீண்ட வரிசையில் 30 மணி நேரம் காத்திருந்து சுவாமி
தரிசனம் செய்கின்றனர். நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர்
மற்றும் உணவு வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.

கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் திருப்பதியில் விஐபி
தரிசனம் மூன்று நாட்களுக்கு ரத்து செய்வதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 79,207 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
அதே போல் உண்டியல் காணிக்கையாக ரூ.3.19 கோடியை பக்தர்கள்
காணிக்கை செலுத்தியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.