பொன்னேரி அருகே திமுக பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உத்தண்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்த முனிநாதன் திமுக கிளைச் செயலாளராக உள்ளார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது மைத்துனரை பார்க்க சென்று, திரும்பி வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு 200 சவரன் நகை, 6 கிலோ வெள்ளி, ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளைபோனது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் வீட்டில் சோதனை செய்தனர். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா ஏதும் இல்லாததால் கொள்ளையர்களை பிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.







