ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் மீதான புகார்; உண்மை தன்மையை கண்டறிய, ரஜினிகாந்த் உத்தரவு என தகவல்!

ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் மீதுள்ள புகார்களின் உண்மை தன்மையை கண்டறிய, ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், டிசம்பர் 31ஆம் தேதி புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார்.…

ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் மீதுள்ள புகார்களின் உண்மை தன்மையை கண்டறிய, ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், டிசம்பர் 31ஆம் தேதி புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார். கட்சி தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய ரஜினி முடிவு செய்துள்ளார். அதன்ஒரு பகுதியாக, ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் மீது மன்ற நிர்வாகிகள் அளித்துள்ள புகார்களின் உண்மை தன்மையை கண்டறிய, அர்ஜூன மூர்த்தி மற்றும் தமிழருவி மணியனுக்கு ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கட்சி துவங்கும்போது, புகார் நிரூபிக்கப்பட்டவர்களை அனுமதிக்கக்கூடாது என்று ரஜினி திட்டவட்டமாக கூறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply