தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டம்!

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில், தமிழ்நாடு புற்றுநோய் பதிவேடு திட்ட அறிக்கையை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர்…

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில், தமிழ்நாடு புற்றுநோய் பதிவேடு திட்ட அறிக்கையை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரர் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’லண்டனில் இருந்து வந்தவர்களில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு கொண்டுவர வாய்ப்பு இல்லைஎனவும், அரசின் அறிவுரைப்படி கட்டாயம் முக கவசம் பயன்படுத்தினால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply