திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து உயிரை மாய்த்துக்
கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே பாப்பான்குளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். வெல்டிங் தொழிலாளியான இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதனிடையே தனிக்குடித்தனம் செல்வது குறித்து வீட்டில் ஏற்பட்ட தகராறில் ராஜ்குமார் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோயில் பின்புறத்தில் ராஜ்குமார் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டபோது ராஜ்குமார் விஷமருந்தி உயிரை மாய்த்துக்
கொண்டது தெரியவந்தது.இதனை அடுத்து சடத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







