”டெல்லி அரசு கொரோனா தடுப்பூசிக்கு தயாராக உள்ளது”- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி அரசு கொரோனா தடுப்பூசிக்கு தயாராக உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்…

டெல்லி அரசு கொரோனா தடுப்பூசிக்கு தயாராக உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ள சுகாதார மற்றும் முன்களப்பணியாளர்கள் உட்பட 51 லட்சம் பேரை அடையாளம் காணும் பணி முடிவடைந்ததாக கூறினார்.

மேலும், ஒவ்வொரு நபருக்கும் இரண்டு டோஸ் கிடைக்கும் என்பதால், முதல் கட்ட தடுப்பூசி ஒரு கோடி பேருக்கு தேவைப்படும் என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தற்போது 74 லட்சம் டோஸை சேமிக்கும் திறன் தங்களிடம் உள்ளதால், இது ஒரு வாரத்திற்குள் ஒரு கோடியாக உயர்த்தப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி தொடர்பான பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதற்கு அனுமதி அளிக்கப்பட்டவுடன் உடனடியாக பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க மாநில அரசுகளும் தயாராகி வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply