மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யத்தின் விவசாய அணி மாநில செயலாளர் மயில்சாமி தலைமையில் 10 பேர் கொண்ட குழு டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார். மேலும், தமிழக விவசாய சங்கத் தலைவர் செல்லமுத்துவும், மநீம குழுவினருடன் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து தம்முடைய ஆதரவை தெரிவிக்கும்படி குழுவினரிடம் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.







