ஜேஇஇ முதன்மை தேர்வு இனி 13 மொழிகளில் நடத்தப்படும்: ரமேஷ் பொக்ரியால்

ஜேஇஇ முதன்மை தேர்வு, இனி 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில்…

ஜேஇஇ முதன்மை தேர்வு, இனி 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கான ஜேஇஇ முதன்மை தேர்வு, தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என தெரிவித்தார். அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும் என்றும், இத்தேர்வுகள் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜேஇஇ-முதல்நிலைத் தேர்வின் முதல் சுற்று, பிப்ரவரி மாதம் 23 முதல் 26-ஆம் தேதி வரை நடத்தப்படும் எனவும், தேர்வு முடிந்த 5 நாள்களில் தேர்வு முடிவு அறிவிக்கப்படும் எனவும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply