இலவச நாப்கின்கள் – ரூ.44 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை!

இலவசமாக நாப்கின்கள் 44 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்க 44…

இலவசமாக நாப்கின்கள் 44 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்க 44 கோடி ரூபாயை ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நகர்ப்புறங்களில் பயிலும் மாணவியர்களுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும், மேலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்களுக்கும் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply