தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக பிரச்சாரத்தை, எடப்பாடி தொகுதியிலிருந்து முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்குகிறார்.
2021 ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தற்போதே திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. இதனையடுத்து அதிமுகவிற்கான தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தொடங்குகிறார்.
இதற்காக அவர் வழக்கம்போல், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியசோரகை கரிய பெருமாள் கோவிலில்வழிபாடுகளை நடத்தி, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிடவுள்ளார்.







