சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று சீனாவின் வூகான் நகரில் முதன் முதலில் தோன்றியது. படிப்படியாக உலகநாடுகளில் பரவி லட்சகணக்கான மக்கள் உயிரைப் பறித்து விட்டது. இதன் தாக்கமே இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், தற்போது இங்கிலாந்தில் கொரோனாவின் புதிய வகை தொற்று பரவ ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கியுள்ளது.
தலைநகர் பெய்ஜிங் நகரில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து பெய்ஜிங் நகரில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அவசர நிலையை சீனா பிறப்பித்துள்ளது. விடுமுறை காலம் என்பதால் கொரோனா தொற்று பரவலை தடுக்க சீனா இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றில் தீவிரம் காட்ட வேண்டும் என்பதால் பெய்ஜிங்கில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு விடுமுறை அளிக்கப்படாது என்றும் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.







