சபரிமலை: நாளொன்றுக்கு 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை!

சபரிமலையில் பக்தர்களை குறைவாக அனுமதித்து வரும் நிலையில் வருவாயும் குறைந்ததால் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென அரசுக்கு தேவசம்போர்டு கோரிக்கை வைத்துள்ளது. கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி…

சபரிமலையில் பக்தர்களை குறைவாக அனுமதித்து வரும் நிலையில் வருவாயும் குறைந்ததால் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென அரசுக்கு தேவசம்போர்டு கோரிக்கை வைத்துள்ளது.

கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 15-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. 16-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். கொரோனா அச்சம் காரணமாக வாரத்தின் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் ஆயிரம் பக்தர்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டாயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மண்டலகால மகரவிளக்கு பூஜைக்கு, அனைத்து நாள்களுக்குமான தரிசன முன்பதிவுகள் நவம்பர் 1-ம் தேதியே முடிவடைந்துவிட்டது. குறைவான பக்தர்களையே அனுமதிப்பதால் சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

கடந்த காலங்களில் மண்டல கால பூஜை காலங்களில் நாளொன்றிற்கு மூன்று கோடிக்கு மேல் வருவாய் கிடைத்ததாகவும், தற்போது பக்தர்கள் குறைவால் நாளொன்றிற்கு10 லட்சம் மட்டுமே வருமானம் வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply