சதுரகிரி மலை கோயிலுக்கு செல்லும் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு!

சதுரகிரி மலை கோயிலுக்கு செல்லும் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவது…

சதுரகிரி மலை கோயிலுக்கு செல்லும் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. இதனை தடுக்கும் விதமாக சதுரகிரி மலைக்கு செல்லும் வழியில் உள்ள தாணிப்பாறை, சங்கிலிப் பாறை, மாங்கனி ஓடை, பிலாவடி கருப்பசாமி கோவில் பகுதி உள்ளிட்ட இடங்களில், 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு ஆய்வு நடத்தி வருகிறது.

வெள்ளப்பெருக்கு காலத்தில், ஓடைகளை கடந்து மக்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். அதேநேரம், ஓடைகளை கடக்க, பாலம் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு பேரிடர் குழுவிடம் கோயில் நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply