கொரோனா தடுப்பூசி : சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது

பாரத் பயோடெக் மற்றும் ஐ.சி.எம்.ஆர் உருவாக்கிய கோவேக்சின் தடுப்பூசியின் முதல் கட்ட சோதனை முடிவுகள் வெளியாகிவுள்ளது. கொரோனா தடுப்பு மருந்துகளை உலக நாடுகள் அனைத்தும் கண்டறியும் முயற்சிகள் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் கண்டறியப்பட்ட தடுப்பு மருந்தின்…

பாரத் பயோடெக் மற்றும் ஐ.சி.எம்.ஆர் உருவாக்கிய கோவேக்சின் தடுப்பூசியின் முதல் கட்ட சோதனை முடிவுகள் வெளியாகிவுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்துகளை உலக நாடுகள் அனைத்தும் கண்டறியும் முயற்சிகள் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் கண்டறியப்பட்ட தடுப்பு மருந்தின் முதல்கட்ட சோதனை முடிவில் கோவேக்சின் தடுப்பூசி பாதுகாப்பாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும் தெரியவந்துள்ளதாக ஐ.சி.எம்.ஆர். அறிவித்துள்ளது.

மூன்று வகையான ஃபார்முலாக்களும் நோய் எதிர்ப்பு சக்தி பலனை அளித்துள்ளன எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பக்கவிளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் இந்த தடுப்பூசி 2 மற்றும் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

கோவேக்சின் தடுப்பூசி தற்போது 3ம் கட்ட மனித உடலில் செலுத்தும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இதில் சுமார் 26,000 பங்கேற்றிருப்பதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply