இந்தியாவில் வாட்ஸ் ஆப் Pay வசதி தொடக்கம்!

இந்தியாவில் வாட்ஸ் ஆப் பே வசதி தொடங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவுக்கான வாட்ஸ் ஆப் தலைவர் அபிஜித் போஸ் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வாட்ஸ் ஆப் உபயோகிக்கும் 2 கோடி…

இந்தியாவில் வாட்ஸ் ஆப் பே வசதி தொடங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கான வாட்ஸ் ஆப் தலைவர் அபிஜித் போஸ் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வாட்ஸ் ஆப் உபயோகிக்கும் 2 கோடி பேருக்கு வாட்ஸ் ஆப் பே வசதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். ஸ்டேட் பேங்க் இந்தியா, எச்டிஎப்சி., ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி வங்கிகளுடன் இணைந்து இந்த வசதி வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் தேசிய பணம் வழங்கல் கார்ப்பரேஷன் அமைப்பின் யுபிஐ முறையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் தமது பே வசதியை கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கான அனுமதி தங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசால் கொடுக்கப்பட்டதாகவும் அபிஜித் போஸ் கூறி உள்ளார். இதன் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply