இலங்கையில் உள்ள சிறை ஒன்றில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை தொடர்ந்து கைதிள் நடத்திய ஏற்பட்ட கலவரத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
உலக நாடுகளை தொடர்ந்து இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது கடந்த இரண்டு மாதங்களாக குறைந்திருந்த பாதிப்பின் அளவு ஊரடங்கு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே அந்நாட்டின் தலைநகர் கொலும்புவில் உள்ள மகாரா சிறைச்சாலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இதுவரை அந்த சிறையில் 1000 கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக கைதிகள் நேற்று முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போராட்டம் கலவரமாக உருவெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 8 கைதிகள் உயிரிழந்ததோடு 55 பேர் படுகாயமடைந்தனர். மேலும் சில கைதிகள் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கலவரத்தை தொடர்ந்து சுமார் 200 கமேண்டோ அதிகாரிகள் உட்பட 600 காவல்துறை அதிகாரிகள் சிறையில் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.







