கால்களை இழந்த நாய்க்கு உதவிக்கரம் நீட்டிய என்ஜினீயர்!

கோவை மாவட்டத்தை சேர்ந்த காயத்திரி என்பவர் 2 கால்களை இழந்த நாய் குட்டி ஒன்றை தத்தெடுத்து, மனிதர்களை போலவே அதற்கென பிரத்யேக சக்கர நாற்காலியை வடிவமைத்துள்ளார். ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் காயத்ரி, சிறு…

கோவை மாவட்டத்தை சேர்ந்த காயத்திரி என்பவர் 2 கால்களை இழந்த நாய் குட்டி ஒன்றை தத்தெடுத்து, மனிதர்களை போலவே அதற்கென பிரத்யேக சக்கர நாற்காலியை வடிவமைத்துள்ளார். ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் காயத்ரி, சிறு வயது முதலே செல்லப்பிராணிகளை வளர்க்க ஆர்வம் கொண்டிருந்துள்ளார். ஆனால் அவரால் படிப்பு, பணிச்சுமை காரணமாக அதை செய்ய முடியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து பணி புரிந்து வருவதால் நாய் குட்டி ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அதற்கு அவர் வீரா என்றும் பெயரிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர் ஊனமுற்று இருந்த நாய்க்குட்டியை யாரும் தத்தெடுக்க மாட்டார்கள் என்பதால், தான் தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும், தனது தந்தை தான், நாய்க்கு ஏற்றவாறு சக்கர நாற்காலி வடிவமைத்து கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். வாயில்லா ஜீவனின் பிரச்னைக்கு உதவியுள்ள காயத்ரியின் செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply