கேரளாவில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கான ஒப்புதல்கள் மிக விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அறிவித்தார். கொரோனா தடுப்பூசிக்கு யாரிடமும் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், இதுவே அரசின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்மூலம், கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அறிவித்துள்ள மாநிலங்களின் வரிசையில், கேரளாவும் இணைந்துள்ளது.







