கார் மோதி கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!

சென்னை வில்லிவாக்கத்தில் கார் மோதி கர்ப்பிணி பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் கௌசிபி இவரது கணவர் ரதி டெக்ஸ்டைல் என்ற துணை கடையில் கணவர் பணிப்புரிந்து…

சென்னை வில்லிவாக்கத்தில் கார் மோதி கர்ப்பிணி பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் கௌசிபி இவரது கணவர் ரதி டெக்ஸ்டைல் என்ற துணை கடையில் கணவர் பணிப்புரிந்து வருவதாக கூறப்படுகிறது. 4 மாத கர்ப்பிணியான இவர் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து விட்டு தனது கணவரிடம் காட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பலியானார்.

மேலும் விபத்து ஏற்படுத்திய காரில் பயணம் செய்த பெண் தப்பி சென்றுள்ளார்.விபத்து ஏற்படுத்திய கார் வருமான வரித்துறை அதிகாரியுடையது எனக்கூறப்படுகிறது.சம்பவ இடத்தில் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் மற்றும் ராஜமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply