நவம்பர் மாதத்தில் Voice call தரத்தில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக TRAI அறிவித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு வோடஃபோன் மற்றும் ஐடியா ஆகிய இரு நிறுவனங்கள் இணைக்கப்பட்டன. இதன்மூலம் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக வோடஃபோன் -ஐடியா இருக்கும் என கூறப்பட்டது. இதனையடுத்து இந்நிறுவனங்கள் இரு பெயர்களையும் இணைத்து ‘Vi’ என பெயரை மாற்றிக் கொண்டனர்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் call தரத்தில் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி வோடபோன் ஐடியா நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கான அறிவிப்பை TRAI வெளியிட்டுள்ளது. ஏர்டெல், BSNL, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களை விட வோடபோன் ஐடியா சிறப்பாக செயல்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Call தரத்தை பொறுத்தவரை, 4.9 புள்ளிகளுடன் வோடபோன் ஐடியா முதலிடத்தில் இருக்கிறது.
இதற்கு அடுத்த இடத்தில் 4.1 புள்ளிகளுடன் BSNL இரண்டாம் இடத்திலும், 4.1 புள்ளிகளுடன் ஏர்டெல் மூன்றாம் இடத்திலும் இருக்கிறது. வோடஃபோன் ஐடியா பயன்படுத்திய பயனர்களில் 88.4 சதவீதம் பேர் call தரம் சிறப்பாக இருப்பதாக பாராட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில் கடந்த அக்டோபர் மாதம் BSNL நிறுவனம் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தது. இது 3.7 புள்ளிகள் பெற்றிருந்ததாக ட்ராய் அறிவித்திருந்தது. 63.86 சதவீதம் பயனர்கள் Call தரம் திருப்தியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.







