கமல் நடிப்பில் பெரிய ஆளாக இருந்தாலும், அரசியலில் பூஜ்ஜியம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, கமல்ஹாசனுக்கு தமிழகத்தை பற்றி என்ன தெரியும் என கேள்வி எழுப்பினார். கமல் நடிப்பில் பெரிய ஆளாக இருந்தாலும், அரசியலில் பூஜ்ஜியம் எனவும் முதலமைச்சர் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஸ்டாலினை திருப்திப்படுத்துவதற்காக, அதிமுக அரசு மீது , திமுகவினர் பொய் புகார் கூறுவதாக குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சி பெண்கள், குழந்தைகள் நலனில் அக்கறையுடன் செயல்படுவதாக தெரிவித்த அவர், திமுகவில் வாரிசுகளையே முன்னிறுத்துவதாகவும், அதிமுகவில் தலைமைக்கு விசுவாகமாக உழைத்தால் தன்னை போல உயர முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் திரையரங்கங்களை முழுமையாக திறப்பது தொடர்பாக நடிகர் விஜய் தன்னை சந்தித்து பேசியதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.







