நடிகர் விஜய்யின் 65வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக வீடியோ ஒன்று படக்குழு சார்பில் வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு வகையான துப்பாக்கிகளுடன் கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ளது போன்று காட்டப்பட்டுள்ளது. இதனை ஒரு புறம் ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும், மற்றொரு புறம் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுல் வீடியோ கடந்த மாதம் வெளியானது. அதிலும் இதே போன்று துப்பாக்கிகளுடன் கேங்ஸ்டர் படம் போன்று பெயர் காட்டப்பட்டிருக்கும். எனவே கமலின் விக்ரம் படத்தை பின்பற்றி விஜய்யும் கேங்க்ஸ்டர் படத்தில் நடிக்கிறார் என்றும், விக்ரம் பட போஸ்டரை தளபதி 65 படக்குழு காப்பி அடித்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கமலை காப்பி அடிக்கிறாரா விஜய்…? ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!
நடிகர் விஜய்யின் 65வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக வீடியோ ஒன்று படக்குழு சார்பில் வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு வகையான துப்பாக்கிகளுடன்…







