எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றமா? நாளை அறிவிக்கிறது நேபாள அரசு!

எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் குறித்து நாளை அறிவிக்கப்படும் என நேபாள அரசு தெரிவித்துள்ளது. உலகின் மிக உயர்ந்த சிகரமாக எவரெஸ்டின் உயரம் குறித்து சீனா மற்றும் நேபாள நாடுகள் மாறுபட்ட கருத்தை வெளியிட்டு…

எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் குறித்து நாளை அறிவிக்கப்படும் என நேபாள அரசு தெரிவித்துள்ளது.

உலகின் மிக உயர்ந்த சிகரமாக எவரெஸ்டின் உயரம் குறித்து சீனா மற்றும் நேபாள நாடுகள் மாறுபட்ட கருத்தை வெளியிட்டு வருகின்றன. சீனா இறுதியாக கணக்கிட்ட எவரெஸ்ட் சிகரத்தின் உயரம், நேபாள நாடு எடுத்திருந்த அளவை விட சற்று குறைவாகவே இருந்தது. இந்நிலையில் சிகரத்தின் உயரத்தை நேபாளம் மீண்டும் கணக்கிட்டுள்ளது. இதன் புதிய உயரம் குறித்து நாளை அறிவிக்கவிருப்பதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.

இதற்காக ஊடகங்கள் அனைத்துக்கும் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் எவரெஸ்டின் உயரம் குறித்து அறிவிப்பது மட்டுமல்லாமல், இந்தப் பணியை முடிக்க உதவியவர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சியும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக எவரெஸ்டின் உயரம் 8,848 மீட்டர் என கணக்கிடப்பட்டது. 2015ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டது. இதன்காரணமாகவே மீண்டும் உயரம் கணக்கிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply