நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின்பும் 2ஜி வழக்கு குறித்து முதல்வர் பேசி வருகிறார்! – திமுக எம்.பி கனிமொழி

நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின்பும் 2ஜி வழக்கு குறித்து முதல்வர் பேசி வருவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற…

நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின்பும் 2ஜி வழக்கு குறித்து முதல்வர் பேசி வருவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரசாரத்தில் மகளிர் மத்தியில் அவர் உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தோல்வி பயத்தின் காரணமாகவே, நீதிமன்றத்தால் ஆதாரம் இல்லை என முடித்து வைக்கப்பட்ட 2ஜி வழக்கு குறித்து பேசி வருவதாக கூறினார். இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் மேலோங்கி இருப்பதை தம்மால் காணமுடிவதாக கூறிய அவர், புதிய தொழில் வளர்ச்சி இல்லாததால் வடமாவட்டங்கள் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதாகவும் கனிமொழி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply