எய்ம்ஸ் மருத்துவமனை அமையவில்லை என்றால் பொதுவாழ்க்கையிலிருந்து விலகத் தயார்- ஆர்.பி.உதயகுமார்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவில்லை என்றால் பொதுவாழ்க்கையிலிருந்து விலகத் தயார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது,…

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவில்லை என்றால் பொதுவாழ்க்கையிலிருந்து விலகத் தயார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது, பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரையில் நிச்சயமாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என தெரிவித்தார். எய்ம்ஸ் மருத்துவமனை அமையவில்லை என்றால் பொதுவாழ்க்கையிலிருந்து விலகத் தயார் என கூறிய அவர், எய்ம்ஸ் அமைக்கப்பட்டால் ஸ்டாலின் பொதுவாழ்க்கையில் இருந்து விலகத் தயாரா என சவால் விடுத்துள்ளார்.

முன்னதாக, மதுரை அருகே எம்ய்ஸ் மருத்தவமனை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கொஞ்சம் காலதாமதம் தான், ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய எதுவுமே செய்யவில்லை என முழு பூசணிக்காயை மூடி மறைத்து பேசிவருகிறார் ஸ்டாலின் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply