சுயநலத்துக்காக கமல்ஹாசன் எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்துவதாக, அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை ராயபுரம் கே.சி.சங்கரலிங்க நாடார் பள்ளியில், மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கமல்ஹாசன் எம்.ஜி.ஆர் தொண்டர்களின் காலையும், அதிமுகவினர் காலையும் பிடித்து வருவதாகக் கூறினார். எம்.ஜி ஆரை எந்த கட்சியினரும் உரிமை கொண்டாடக்கூடாது என கூறிய அவர், எம்.ஜி.ஆர் பெயர் சொல்ல கமலுக்கு தகுதி இல்லை என்றும் குறிப்பிட்டார். லஞ்சம், ஊழலை முற்றிலும் ஒழிக்கவே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜெயக்குமார் கூறினார். ரஜினி கட்சி ஆரம்பித்தாலும், மக்கள் தங்களுக்குத்தான் அங்கீகாரம் அளிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், யார் கட்சி தொடங்கினாலும் தாங்கள் கவலைப்படப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.







