எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து டிடிவி தினகரன் அஞ்சலி!

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவுத்தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்துக்கு தனது…

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவுத்தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்துக்கு தனது கட்சியினருடன் டிடிவி தினகரன், ஊர்வலமாகச் சென்றார். பின்னர் எம்ஜிஆர் நினைவிடத்தில் டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தமிழன், முன்னாள் அரசு கொறடா மனோகரன், அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி உள்ளிட்டோரும் எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply