வயல்வெளியில் டிராக்டர் கலப்பையில் சிக்கி, 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் புளிகொராடு கிராமத்தில், லோகநாதன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு 4 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் லோகநாதன் தனது நிலத்தில் உழவு பணியில் ஈடுபட்டிருந்தார்.
டிராக்டர் வைத்து உழவு பணியில் ஈடுபட்டிருந்த போது, அவரது மகன் அங்கே வந்து விளையாடியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்த சிறுவன் கலப்பையில் சிக்கி பலியானார். இதனை சற்றும் எதிர்பாராத தந்தை மிகவும் அதிர்ச்சியடைந்தனர், இதனையடுத்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







