உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் 139வது பிறந்தநாள் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பலர் பாரதி குறித்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில், “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்” என்ற பாரதியாரின் வரிகளை மேற்கோள்காட்டி பதிவிட்டுள்ளார். மேலும், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப்பெறுவதன் மூலம், தமிழ் கவிஞரான பாரதிக்கு மரியாதை செலுத்துவோம், எனவும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்







