2021 ஏப்ரல் வரை ஆன்லைன் வகுப்புகள்தான்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் கல்லூரிகளுக்கு அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வரை ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று…

பொறியியல் கல்லூரிகளுக்கு அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வரை ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கும் சூழலில், மத்திய அரசு தளர்வுகளுடன் பள்ளி, கல்லூரிகள் செயல்பட அனுமதியளித்தது. இந்நிலையில் அண்ணா பல்கலைகழகம் மாநில முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் நடப்பு கல்வியாண்டு முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் 2021 ஏப்ரல் வரை ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு மட்டும் 2020 டிசம்பர் முதல் 2021 ஏப்ரல் வரை நேரடி வகுப்புகள் நடைபெறும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.மேலும் ஆன்லைன் வகுப்புகளில் ஒரு நாளைக்கு 5 பாட வேளைகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply