கொரோனா அச்சுறுத்தலால் குறைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைகளை 70% முதல் 80% வரை உயர்த்த மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய அரசு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கு கடந்த் மார்ச் மாதம் தடை விதித்தது. இதனை அடுத்து கடந்த மே மாதம் முதல் உள்நாட்டு விமான சேவைகளை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்ததை தொடர்ந்து 45 முதல் 60% உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு இந்தியாவில் குறையத் தொடங்கியுள்ளதை தொடர்ந்து இந்தியாவில் உள்நாட்டு விமான சேவைகளை 70 முதல் 80% வரை உயர்த்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி, கொரோனா காலத்தில் உள்நாட்டில் விமானங்களில் பயணித்தவர்களின் எண்ணிக்கை கடந்த மே 25 ஆம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை 2,52,000 ஐ எட்டியுள்ளது. இன்று முதல் உள்நாட்டு விமானங்கள் 70 முதல் 80% வரை இயங்க அனுமதியளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.







