உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்க உள்ளார்.
70 தொகுதிகள் கொண்ட உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 47 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இந்நிலையில், புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான கூட்டம் தலைநகர் டராடூனில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில், முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமியை, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வு செய்தனர். இதையடுத்து, முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி இன்று மாலை 3.30 மணிக்கு பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் புஷ்கர் சிங் தாமி போட்டியிட்ட காட்டிமா தொகுதியில் அவர் தோல்வியடைந்தார். இன்று பதவியேற்கும் அவர் தொடர்ந்து 6 மாதங்களுக்கு முதலமைச்சராக நீடிப்பார். அதற்குள் அவர் ஏதேனும் ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற்றாக வேண்டும். இன்று புஷ்கர் சிங் தாமியுடன் கேபினெட் அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







