ஈரோட்டில் புற்றுநோய் கண்டறியும் மையம் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஈரோட்டில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு…

ஈரோட்டில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு கைகளை கழுவி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

உலக சுகாதார நிறுவன ஆய்வின்படி 24 சதவீத நோய் தொற்று கை
கழுவாததால் ஏற்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது.நல்லமுறையில் கை சுகாதாரம்
பாதுகாத்து வந்தால் 70 சதவீத உயிர் பாதிப்புகளை தடுக்க முடியும்.

தமிழ்நாடு முழவதும் 2284 மருத்துவமனைகளில் கைகழுவுதல் நிகழ்ச்சி நடைபெற்று
வருகிறது. ஈரோட்டில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளதாக புகார்
எழுந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதல்வர்
உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஈரோடு ராணிபேட்டை கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் புற்றுநோய் கண்டறியும் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊட்டி, கொடைக்கானல், கொல்லிமலை தாளவாடி உள்ளிட்ட மலை
கிராமங்களுக்கு மருத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.தமிழத்தில் உள்ள அனைத்து
மலைகிராமங்களுக்கும் சுகாதார வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.