இந்தியாவில் இதுவரை 96.44 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 96,44,222 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 91,00,792 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,03,248 பேர் நாடு முழுவதும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,40,182 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 36,011 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 41,970 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர். 482 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 14,69,86,575 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 11,01,063 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.